இந்திய இராணுவத்தளபதி, ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஐந்து நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை வருகின்றார்.
அக்டோபர் 12 ஆம் திகதி அவர் இலங்கை வருவார் என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜெனரல் நரவனே, இந்த பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சியான ‘மித்ரா சக்தி’யின் தொடர்ச்சியான 8 வது கட்டத்தையும் பார்வையிடுவார்.
அத்துடன் இலங்கையில் அரசியல் தலைவர்கள் மற்றும் படைத் தளபதிகளையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.