லண்டனில் Tower Hamlets Cemetery பூங்காவில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட நபர் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு 20,000 பவுண்ட் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ஓரினச்சேர்க்கையாளரான (East End-ல் Kankanamalage) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் திகதி Tower Hamlets Cemetery பூங்காவில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில், உயிரிழந்த நபரின் சடலத்தினை பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்,பிரேத பரிசோதனையின் அறிக்கையில், குறித்த நபர் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், இந்த சம்பவம் LGBT+ சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சிறப்பு அதிகாரிகளும் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு கணிசமான தொகையை கொடுக்க பொலிஸார் முன்வந்துள்ளனர். இதற்காக 20,000 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 54,46,895 ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களின் அடிப்படையில் இரண்டு பேர் சிக்கியுள்ளதுடன்,அவர்களின் புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து துப்பறியும் மேற்பார்வையாளர் Pete Wallis கூறுகையில்,கொலையின் சூழ்நிலைகளைப் பார்க்கும் போது, மக்கள் இது குறித்து தகவல் தெரிவிக்க தயங்குவதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.இருந்த போதிலும், இதை அறிந்தவர்கள் பொலிஸாரிடமோ அல்லது LGBT+ சமூகத்தினர் யாரிடமாவது நீங்கள் கூறலாம்.
குறிப்பாக நாங்கள் இப்போது வெளியிட்டுள்ள இந்த இரண்டு நபர்கள் பற்றி தெரிந்தால், உடனே தெரிவிக்கும் படியும், பகிரப்படும் தகவல் இரகசியமாக வைக்கப்படும் என்றும் , உதவ முடிந்தால் உள்ளூர் காவல்துறைக்கு 101- என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறும் அறிவித்துள்ளார்.