மேல் மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் செயற்பாடு நாளை முதல் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர மற்ற வாகனங்களுக்கான வருமான உரிமங்கள் நாளை முதல் கிடைக்கும் என்று மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மேல் மாகாணத்தில் குறித்த நடவடிக்கை கடந்த 13 முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை ஒக்டோபர் 12 முதல் காலாவதியாகும் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையும், டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெறவேண்டிய அனுமதிப் பத்திரங்களும் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் பல இடங்களில் வழங்கப்படும்.
மேல் மாகாண மோட்டார் வாகன திணைக்களம், களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பிரதேச செயலகங்கள் ஆகிய இடங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.