அதிபர் – ஆசிரியர் சங்க போராட்டம் 100 நாட்களைக் கடந்து செல்கின்றது. அரசாங்கம் இதுவரை தீர்வு வழங்கவில்லை, எனவே எமக்கான தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என வடக்கு – கிழக்கு மாகாண இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜீ.ருபேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதிபர் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுக்கான தேசிய ஒற்றுமை இயக்கத்தின் ஊடாக இந்த போராட்டத்தினை தொடர்ந்து கொண்டு செல்வதாக முடிவு செய்திருக்கின்றோம்.
எனினும் சில சங்கங்கள் 25ஆம் திகதி வேலைக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தோம், இந்த போராட்டம் வெற்றி பெறும் வரையில் தொடர்ந்தும் போராடும் என்று. அதேபோன்று எங்களுடன் இணைந்திருக்கின்ற 19 தொழிற்சங்கங்களுடன் ஒன்றிணைந்து முடிவினை எடுத்திருக்கின்றோம்.
அரசாங்கம் சரியான தீர்வினை பெற்றுத்தரும் வரை எங்களுடைய போராட்டம் தொடர்ந்து செல்லும் அதேவேளை இந்த போராட்டத்தை காட்டிக் கொடுக்கின்றவர்களுக்கு தெட்டதெளிவாக செல்லுகின்றோம் உங்களைப்போன்று எமது போராட்டம் இடை நடுவில் கை விடமாட்டோம் என்பதை. அவ்வாறே தொடர்ந்து அழுத்தங்களை கொடுக்கின்ற அரசாங்கத்திற்கு கூறிக்கொள்கின்றோம் அழுத்தங்களை கொடுக்காது இந்த ஆசிரியர்களுக்கு சரியான தீர்வை பெற்றுக் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.