பிரித்தானியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்க குறைந்த விலையில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய விதிமுறை ஞாயிற்றுக்கிழமைமுதல் அமுலுக்கு வந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து பிரித்தானியா வருவோா் இனி பி.சி.ஆர் பரிசோதனைக்குப் பதிலாக lateral flow test பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
இந்த நடவடிக்கை நாட்டில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும்’ என சுகாதாரத் துறைச் செயலா் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
இரு அளவு தடுப்பூசி செலுத்தாத பயணிகள், பிரித்தானிய வந்தடைந்த இரண்டாவது மற்றும் எட்டாவது நாள்களில் கட்டாயம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 10 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.