நிகான் நிறுவனத்தின் இசட்9 மிரர்லெஸ் கேமரா இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
நிகான் இசட்9 புல்-பிரேம் மிரர்லெஸ் கேமரா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பிளாக்ஷிப் கேமரா மாடல் ஆகும். இதில் 45.7 எம்.பி. சி-மாஸ் சென்சார், 3.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட மாணிட்டர், எலெக்டிரானிக் வியூ-பைண்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
நிகான் இசட்9 மாடல் இன்டர்-சேன்ஜ் செய்யக்கூடிய லென்ஸ்களுடன் கிடைக்கிறது. இந்த கேமரா 8K 30 பிக்சல் வீடியோ கேப்ச்சர் வசதி கொண்டிருக்கிறது. இதை கொண்டு தொடர்ச்சியாக 125 நிமிடங்களுக்கு வீடியோ பதிவு செய்ய முடியும். புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் போது நிகான் இசட்9 மொத்தத்தில் ஒன்பது விதமான பொருள்களை அடையாளம் கானும் என நிகான் தெரிவித்துள்ளது.
மெக்கானிக்கல் ஷட்டர் இன்றி நிகான் வெளியிட்டு இருக்கும் முதல் புல்-பிரேம் மிரர்லெஸ் கேமரா இது ஆகும். இந்திய சந்தையில் புதிய நிகான் இசட்9 விலை ரூ. 4,75,995 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் மாதத்தில் இந்த கேமரா நிகான் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும்.