தான் ஜனாதிபதியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
இணையத்தள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக சிரேஷ்டத்துவம் கொண்ட நபர் என்பதனால் தான் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் பின்னடைவை சரி செய்து தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



















