உலக சுகாதார ஸ்தாபனம் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை தமது அவசரக்கால பட்டியலில் இணைத்து அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அடிக்கடி ஆலோசித்து வந்துள்ள நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் தடுப்பூசியின் வினைத்திறன் தொடர்பான தகவல்களைக் கோரி வந்துள்ளது.
இதற்குக் குறித்த நிறுவனமும் ஒத்துழைப்பு வழங்கி தரவுகளை வழங்கி வந்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நோயெதிர்ப்பு தொடர்பான ஆலோசனைக்குழு இன்று கூடியபோது கோவாக்சின் தடுப்பூசிக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
மேலும் இந்த தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு நன்கு வாரங்களின் பின் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறித்த ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு இந்த தடுப்பூசியைச் செலுத்துவது தொடர்பில் குறித்த குழு ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது.