சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த போது, 2024 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து நிலவில் மனிதர்களை தரையிறக்கும் லேண்டரை வடிவைப்பதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்கு லேண்டரை வடிவைப்பதற்கான 2.9 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நாசா வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில்,இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் நாசா நிர்வாகி பில் நெல்சன், இந்த வழக்கின் காரணமாக ஏழு மாதங்களை இழந்துவிட்டதாகவும், இதன் காரணமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் 2025 ஆம் ஆண்டிற்கு முன்பு நடைபெற வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.
விண்வெளி வீரர்கள் பயணம் செய்வதற்காக ஆர்டிமிஸ் லூனர்-3 என்ற விண்வெளி ஓடத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால் இதன் பணிகள் தாமதமாகி உள்ளன.
எனவே இது சம்பந்தமாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.