இலங்கை இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடந்த கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.