உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதி ஷஹ்ரான் ஹாசிம் உள்ளிட்டவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ள காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டு கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
நியூசிலாந்தில் முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பயங்கரவாதி ஷஹ்ரான் ஹாசிம் அந்த காணொளியில் தெரிவித்துள்ளான்.
இதன்போது பயங்கரவாதி ஷஹ்ரான் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, “ஜிகாத்தின் மூலமே நாங்கள் கண்ணியம் பெற்றோம். ஆயுதங்களை ஏந்திய பின்னரே நாங்கள் உயர்வை அடைந்தோம்.
இன்று இறைவன் அல்ஹாவிற்காக நாங்கள் உயிரை கொடுப்பதற்கு ஒன்று கூடியுள்ளோம். வீர மரண தாக்குதல் ஒன்றுக்காக கூடியுள்ளோம். கொலை செய்யப்படுவதற்கு தான் நாங்கள் இந்த பாதைக்கு வந்துள்ளோம்.
எங்கள் கணக்கில் அல்ஹாவிற்காக கொல்லப்படுவது வெற்றியாகும். நாங்கள் செய்யும் இந்த தியாகம் மிகப்பெரிய போருக்கான ஆரம்பமாகும். எங்களது உயிரைவிட கொள்கை தான் மதிப்புமிக்கது. எங்கள் முயற்சி வீணாகாது. அல்ஹாவிற்காகவே இதனை செய்கின்றோம்.” என குறிப்பிட்டார்.