ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ருவன்வெளிசாய விஹாரையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோற்கடித்து, ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ச வெற்றியீட்டியிருந்தார்.
சுபீட்சத்தின் நோக்கு என்னும் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.