பல நாடுகளில் சாலையில் வாகனங்களின் சீரான இயக்கத்தை உறுதிப்படுத்த வலதுகை போக்குவரத்து விதி பின்பற்றப்படுகின்றது.
இலங்கை உள்ளிட்ட சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இடது கை போக்குவரத்து விதி தான் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த சாலை விதியின் மூலம் பல நாடுகளில் சாலையின் வலது பக்கம் வாகனங்களை இயக்கும் பெரும்பான்மை நாட்டினரை போல இல்லாமல், நடப்பது மற்றும் வாகனம் ஓட்டுவது என இடது பக்கத்தில் தான் சாலை விதிகளை பின்பற்றி வருகிறார்கள்.
உலகளவில் சுமார் 65% மக்கள் வலதுகை போக்குவரத்து விதியை பின்பற்றி சாலையின் வலப்பக்கம் தங்கள் வாகனத்தை இயக்கி வரும் நிலையில், உலக தரநிலை வெப்சைட்டின் படி, உலக மக்கள் தொகையில் சுமார் 35% பேர் சாலையின் இடதுபுறம் வாகனத்தை ஓட்டுகிறார்கள்.
இப்படி இடது கை போக்குவரத்து விதியை பின்பற்றி வரும் பெரும்பாலான நாடுகள் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த பழைய பிரிட்டிஷ் காலனி நாடுகள் ஆகும்.
இடது கை போக்குவரத்தைப் பின்பற்றும் இந்த நடைமுறை பிரிட்டிஷ் காலத்தில் இருந்து வந்துள்ளது. இந்த விசித்திர நடைமுறைக்கு மேலும் சில கடந்த கால காரணங்களும் உள்ளன.
கடந்த காலத்தில், நிலப்பிரபுத்துவம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றாக இருந்ததால் அவர்களை தவிர கிட்டத்தட்ட அனைவரும் சாலையின் இடது புறமே பயணம் செய்தனர்.
அதே போல குறிப்பாக பண்டைய கால வாள்வீரர்களில் பெரும்பாலானோர் வலது கை பழக்கம் கொண்டவர்கள் என்பதால் தங்களது வாள் அல்லது பிற ஆயுதங்களை இடது பக்கமாக பாதுகாத்தனர்.
இது எதிரிகளின் திடீர் தாக்குதலை சமாளிக்க அவர்களுக்கு உதவியது. எனவே வாள்வீரர்கள் பெரும்பாலும் சாலையின் இடதுபுறத்தில் பயணம் செய்தனர்.
மற்றொரு காரணம் பழைய காலத்திலிருந்தே உள்ளது. குதிரை வீரர்கள் இடது பக்கத்திலிருந்து குதிரையின் மீதேறுவதை வசதியாக கருதினர்.
எனவே குதிரை சவாரி செய்பவர்கள் இடது பக்கம் மட்டுமே சவாரி செய்ய வேண்டும் என்ற விதி ஒருகாலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இதனுடன் மேலும் சேர்க்கப்பட வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால் ராணி எலிசபெத் காலத்தில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சாலையின் இடதுபுறம் பயணிக்க முடியும்.
பொதுமக்கள் அனைவருமே சாலையின் வலது பக்கம் தான் நடந்து செல்ல வேண்டும். மேற்காணும் அம்சங்கள் அனைத்தும் சாலையின் இடது பக்கத்தில் வாகனம் ஓட்டுவதற்கான விதிகளுக்கு வழிவகுத்து இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது.