கேரள சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணூபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகலா(24). இவர், சின்னத்துரை தொடர்களிலும், சினிமாவில் சிறிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே, இவர் வழக்கம்போல் சினிமா படப்பிடிப்புக்கு செல்ல, வீட்டிலிருந்தவர்கள் கடைக்கு சென்ற நேரத்தில், கொள்ளையர்கள் 20 பவுன் நகை திருடிச்சென்றுள்ளனர்.
மேலும், திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து திருடிய சம்பவத்தின் காட்சி சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீகலாவின் தங்கை ஜெயா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.