ஆக்ஸிஜனை அளிக்கு புதிய துணி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்து அசத்தியுள்ளனர்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடிப்பில் திடீரென ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரை தேடிப்போகாமல், புதிய பைபர் துணியின் மூலம் ஆக்ஸிஜன் கிடைக்க செய்யுமாறு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
மேலும், இந்த பைபர் துணியை கொண்டே உடலின் தேவைக்கான ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளமுடியுமாம். விளையாட்டு வீரர்கள் மேடையில் நடனமாடுபவர்கள் என அனைவருக்கும் இந்த ஆக்ஸிஜன் துணி உதவியாக இருக்கும்.
இந்த துணியை அணிந்துகொள்வதால், உடலுக்கு நேரடியாகவே ஆக்ஸிஜன் செல்லுமாம். இது தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுப்பிடிப்பாக உள்ளது.
இந்த துணி எவ்வாறு செயல்படுகிறது என்றால், பல அடுக்குகள் கொண்ட இந்த துணியின் நடுவில் ஒரு திரவ சேனல் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு திரவ அமைப்பின் கீழ் இயக்கப்படுகிறது.
இதனால் யார் இந்த துணியை அணிந்தாலும் ஆக்ஸிஜன் செயல்படத்தொடங்கிறது. இந்த துணியானது மனித தோலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.