உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி இருக்கும் வேலையில், பல நாடுகளில் ஊரடங்கு முறை தற்போது அமல்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசின் 5-வது அலை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வருகிற 22-ந்தேதி முதல் இந்த ஊரடங்கு அமலுக்கு வரும் என அந்த நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுமார் 20 லட்சம் பேருக்கு மட்டும் அந்த நாட்டு அரசு ஊரடங்கை அறிவித்திருந்ததுள்ளது.