தமிழ் சினிமாவில் பல ஆசைகளில் வந்து சினிமாத்துறையை கையில் எடுத்து முன்னேறியவர்கள் பலர். அதில் ஏதாவது செய்து பிரபலமாகிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னை வந்தவர் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானார்.
இதையடுத்து தயாரிப்பில் இறங்கியும் தனியாக படம் நடித்தும் வந்தார். சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமாருடன் பிக்கப் டிராப் படத்தினை தயாரித்து நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது ம்ருத்துவமனையில் அனுமதித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
6 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மயக்கத்தால் கீழே விழுந்துள்ளார் ஸ்ரீனிவாசன். தற்போது மீண்டும் படப்பிடிப்பில் நெஞ்சிவலியுடன் மயக்கமடைந்துள்ளார். தற்போது உடல் நிலை சீராகி வருவதாகவும் கூறப்படுகிறது.