இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக இசைவாணி வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.