மலையாள சினிமாவில் தான் அப்போதெல்லாம் அந்த மாதிரியான நடிகைகளின் வருகை தமிழ் சினிமாவில் அதிகரித்தது. அப்படி பல நடிகைகள் தமிழில் அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்தனர். அந்தவரிசையில் இருந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. அனைத்து நடிகர்களும் அப்போது இவர் தான் நடிக்க வேண்டும் என்று கூறிய நடிகைகளில் இவரும் ஒருவராக பீக் நடிகையாக இருந்தார். அப்படி இருக்கும் போது சில்க் ஸ்மிதா ஏதோ ஒரு காரணத்திற்காக தற்கொலை செய்து இறந்தார்.
அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வழக்கு முடிக்காமலே இருந்தது. அவர் சம்பாதித்த பணத்தை வைத்து நிறைய பேருக்கு உதவி செய்ததாகவும், கடைசியில் அவரது கஷ்ட காலத்தில் உதவி பெற்றவர்கள் அனைவரும் கைவிட்டதாகவும் அதனால் மனமுடைந்த சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. புகழின் உச்சத்திற்கு சென்ற சில்க்ஸ்மிதா போதை பழக்கத்திற்கு அடிமையாகி அந்த போதை பழக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இப்படி போதையில் ஊறிப்போன அவருக்கு அதிக போதை தேவைப்பட்டதால் போதை மாத்திரைகள் உட்கொள்ளவும் பழகிக் கொண்டார். அந்த போதை மாத்திரைகளை ஒரு டாக்டர் மூலம் பெற்றதாகவும் நாளடைவில் அந்த டாக்டரை மணமுடித்துக் கொண்டதாகவும் கூறுகின்றனர்.
சில்க் ஸ்மிதா கல்யாணம் செய்த மருத்துவர் ஏற்கனவே கல்யாணம் ஆனவர். அவருக்கு வாலிப வயதில் ஒரு பையன் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பையனை படத்தில் நடிக்க வைப்பதற்காக சில்க் ஸ்மிதா தான் செல்லும் அனைத்து சூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், எல்லா இயக்குனர்களிடம் அவருக்காக சிபாரிசு செய்ததாகவும் கூறுகின்றனர்.
சில்க் ஸ்மிதா அந்த பையனுடன் சுற்றுவதை பார்த்த சொந்த தந்தையே, அவனுடன் உறவு வைத்து இருக்கிறாயா என்று கேட்டதாகவும் அதனால் மனமுடைந்த சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகின்றனர்.