நாட்டில் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பாடசாலையில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த முறையான வேலைத்திட்டம் வகுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால் பாடசாலைகள் அனைத்தும் மூடும் நிலைமைக்கு தள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாடசாலைகள் திறக்கப்பட்டன அதனை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.