கொரோனாவின் புதிய மாறுபாடு உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில், கனடாவில் மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் புதிய மாறுபாடான Omicron தொற்று உலக நாடுகள் பலவற்றில் வேகமெடுத்து வருகிறது. இந்த நிலையில் பொதுவெளியில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என கனேடிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் குறிப்பிட்ட சிலருக்கு இந்த அறிவுறுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு மாஸ்க் கட்டாயம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, மாஸ்க் அணிவதால் மூச்சுத்திணறல் அல்லது சுவாசப் பிரச்சனைகள் கொண்டவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவில் மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறார்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கில், 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு மாஸ்க் கட்டாயம் அல்ல என அறிவித்துள்ளனர். இருப்பினும், 2 வயது முதல் 9 வயது வரையான சிறார்கள் மாஸ்க் அணிவதில் தவறில்லை எனவும், 2 வயதுக்கு கீழ் மாஸ்க் தேவை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Saskatchewan மாகாணத்தில் 2 வயது முதல் 12 வயதுடைய பிறவி நோயால் பாதிக்கப்ப சிறார்களுக்கு மாஸ்க் கட்டாயமல்ல என அறிவித்துள்ளனர். மேலும், கலைஞர்களும் நாடக நடிகர்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மாஸ்க் கட்டாயமல்ல எனவும்,
ஆனால் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்காக ஆதாரங்கள் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மருத்துவ ரீதியாக விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே மாஸ்க் கட்டாயமல்ல என அறிவித்துள்ளது ஆல்பர்ட்டா.
உளவியல் பாதிப்பு கொண்டவர்கள், உடக் ரீதியான பாதிப்பு கொண்டவர்களுக்கு மாஸ்க் கட்டாயமல்ல என பிரிட்டிஷ் கொலம்பியா அறிவித்துள்ளது. கனடாவின்பெரும்பாலான மாகாணங்கள் விதிவிலக்குடன், மாஸ்க் கட்டாயம் என்றே சுட்டிக்காட்டியுள்ளது.