நாட்டில் 16 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 2ஆம் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, 12 – 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு முதலாவது கோவிட் தடுப்பூசியையும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படும் திகதிகள் தொடர்பான தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.