நாட்டில் கோவிட் தொற்று காரணமாக மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றினால் உயிரிழந்தவர்களில் 09 ஆண்களும், 09 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,555 ஆக இருந்தது, தற்போது 14,573 ஆக அதிகரித்துள்ளது.