ஒமிக்ரோன் திரிபினை இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசிகளினால் கட்டுப்படுத்த முடியாது என பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய திரிபுகளை கட்டுப்படுத்துவதற்கான ஆற்றல் இரண்டு தடுப்பூசி டோஸ்களுக்கு கிடையாது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபு தொடர்பில் ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் மூலம் குறிப்பிடத்தக்களவு அதாவது 75 வீதம் அளவிற்கு பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசிகள் கோவிட்டிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
581 ஒமிக்ரோன் திரிபுகள் மற்றும் ஆயிரக்கணக்கான டெல்டா திரிபாளிகள் என்போரிடம் நடாத்திய ஆய்வுகளின் பின்னர் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அஸ்ட்ரா செனகா மற்றும் பைசர் ஆகிய இரண்டு கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு புதிய திரிபினால் பாதிப்பு ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாத நடுப்பகுதிகளில் பிரித்தானியாவில் ஒமிக்ரோன் திரிபாளிகளின் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு பதிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.