தன்னுடைய மகன் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்காக துபாயில் குடியேறியுள்ளார் பிரபல நடிகரான மாதவன்.
அலைபாயுதே படத்தின் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் மாதவன், திருமணமாகி திரைத்துறைக்கு வந்து சாதித்த நடிகர்களில் முக்கியமானவர்.
இன்று வரை தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் சூப்பரான நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
இவரது மகன் வேதாந்த், நீச்சல் வீரர், சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் பங்கேற்று 7 பதக்கங்களை வென்றார்.
தொடர்ந்து 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார், இதற்காக முறையான நீச்சல் பயிற்சி பெறவுள்ளார் வேதாந்த்.
எனவே மகனுக்காக தன்னுடைய மனைவி சரிதாவுடன் துபாயில் குடியேறியுள்ளார் மாதவன்.
இதுகுறித்து அவரே வெளியிட்டுள்ள தகவலில், என்னுடைய மகன் வேதாந்த், ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்.
இதற்காக பெரிய நீச்சல் குளங்கள் தேவை, ஆனால் மும்பையில் கொரோனா காரணமாக நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன.
எனவே நான் குடும்பத்துடன் துபாயில் குடியேறியுள்ளேன், எனது மகன் பதக்கங்களை வென்று எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய மகனை நடிகராக்குவதில் விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.