2021 ஆண்டு இதுவரை காலத்தில் இலங்கையில் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் 7 பேர் கொல்லப்பட்டனர்.
கொழும்பின் ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 847 வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதன்போது 16 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
இந்த வெடிப்புச் சம்பவங்களில் 797 சம்பவங்கள் லிற்றோ கொள்கலன்களுடன் தொடர்புடையவையாகும். 50 சம்பவங்கள், லாப் எரிவாயு கொள்கலன்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.
அறிக்கைகளின்படி 477 சம்பவங்கள் எரிவாயு அடுப்புகள் வெடித்த சம்பவங்களாக பதிவாகியுள்ளன.
299 சம்பவங்கள், எரிவாயு கசிவுடன் சம்பந்தப்பட்டவை. 52 சம்பவங்கள் எரிவாயு குழாய் தொடர்புடையவை.
அத்துடன் 15 ரெகுலேட்டர் சேதமடைந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.