ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்திய விலை உயர்வின் போது நீக்கிய சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 499 பிரீபெயிட் சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது. முந்தைய விலை உயர்வின் போது ரூ. 499 சலுகை நீக்கப்பட்டு இருந்தது. தற்போது சந்தாதாரர்களை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ஜியோ ரூ. 499 சலுகை கிட்டத்தட்ட முந்தைய பலன்களுடனேயே மீண்டும் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ. 499 சலுகையில் தற்போது 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சேவைக்கான ஒரு வருட சந்தா வழங்கப்படுகிறது. இவைதவிர தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 56 நாட்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த பலன்களுடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை ஜியோ செயலி, வலைதளம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.