கலஹா -லூல்கந்துர பிரதேசத்தில் ரஷ்ய பிரஜை ஒருவர் பயணித்த பெரசூட் 30 அடி உயரமான மரத்தில் சிக்கியுள்ளதுடன் அதில் இருந்து கீழே விழுந்த ரஷ்யர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 வயதான ரஷ்ய பிரஜையே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். ரஷ்யர், ரெலிமங்கொட பிரதேசத்தில் தரையிறக்க முயற்சித்த போது இந்த விபத்து நடந்துள்ளது.
காயமடைந்த ரஷ்யர், கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.