தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக 18 வருடங்கள் இருந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனர். நேற்று இரவு வந்த அறிவிப்பு ரசிகர்களும் கடும் ஷாக் கொடுத்து இருக்கிறது. அவர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் தனுஷ் பற்றி ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விஷயம் வைரல் ஆகி வருகிறது. தேசிய விருது பெற்ற கணவர் தனுஷ் மற்றும் அப்பா ரஜினி இருவரும் இருக்கும் போட்டோவை பகிர்ந்த அவர் “#prouddaughter #proudwife” என குறிப்பிட்டு இருந்தார்.
Proud wife என மூன்று மாதத்திற்கு முன் சொன்ன ஐஸ்வர்யாவுக்கு தற்போது என்ன ஆனது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் தனுஷ் உடன் ஐஸ்வர்யா கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தான் போட்டோ வெளியிட்டு இருக்கிறார். கர்ணன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் போட்ட பதிவு அது. தனுஷ் இன்ஸ்டாகிராமில் எப்போதும் தனது படங்கள் பற்றிய பதிவுகளை மட்டுமே போட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram




















