தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா, கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றே கூறலாம்.
பிரிவிற்கு பிறகு இருவரும் தங்களின் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடிய பாடல் சென்சேஷனல் ஹிட்டானது.
இந்நிலையில் நாக சைதன்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் சமந்தா ஒரு குறித்து பேசியுள்ளார். திரையில் உங்களுக்கு பொருத்தமான நடிகை யார் என கேட்டதற்கு “சமந்தா” என பதிலளித்துள்ளார்.




















