கொழும்பு துறைமுக நகரின் Marina Promenade பகுதியைப் பார்ப்பதற்காக கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 90,000 பேர் விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த 8 நாட்களில் மாத்திரம் 90 ஆயிரம் பேர் கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த ஜனவரி 09-01-2022 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா வலயம் பொதுமக்களுக்காக தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வரவு எண்ணிக்கை அதிகிரித்துள்ளது.