பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளர் ராஜு இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். எல்லோரும் அவருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ராஜு பிக்பாஸ் பிறகு என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை, ஒரு இன்ஸ்டா போஸ்ட் கூட இல்லை.
இந்த நேரத்தில் தான் ராஜு பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அவர் யார் என்றால் வீட்டில் தனது அண்ணனாக ராஜு கொண்டாடிய இமான் அண்ணாச்சி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இமான் அண்ணாச்சி, ராஜுவை கேக் வெட்டி வெற்றியை கொண்டாட வைத்துள்ளார்.
அந்த புகைப்படங்களையும் இமான் அண்ணாச்சி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




















