நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ராஜு பல நேரங்களில் அமைதியாக இருப்பதற்கு காரணம் பற்றி ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.
அவருடைய கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களால் தான் எந்த ஒரு செயலுக்கும் அதிக அளவில் உணர்ச்சிகளை காட்டாமல் இருந்து வருகிறாராம்.
பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றிருக்கும் ராஜூவின் ரசிகர்கள் அவர் அதிக அளவில் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படையாக காட்டியதில்லை என்று அவரை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் அதற்குரிய காரணம் ஆரம்ப காலத்தில் அவர் பட்ட வேதனைகளும் துயரங்களும் தான் அது மட்டுமல்லாமல் அவருடைய மனதை பாதித்த மரணமும் ஒன்று என்று அவர் கூறியுள்ளார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அவருடைய மனம் அதிக அளவில் மாற்றம் அடைந்துள்ளதாம்.
பல நேரங்களில் எந்த பிரச்சனைகள் தனக்கு முன்பு நடந்து கொண்டிருந்தாலும், அதில் அதிக அளவில் ரியாக்ட் செய்யாமல் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசி வருகிறார் என்றுதான் ராஜூ மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர்.
ஆனால் அவருடைய ரசிகர்கள் அவர் தன்னுடைய கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டிய இடத்தில் சரியான முறையில் எடுத்துரைத்து வருகிறார் என்று கூறி வருகின்றனர். ஆனாலும் அவரைப் பற்றி நெகட்டிவாக பேசுபவர்களுக்கு தற்போது ராஜுவின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு எவ்வளவோ போராட்டங்களையும் கஷ்டங்களையும் பார்த்துதான் ராஜு தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் முன்னேற்றங்களை அடைந்து இருக்கிறார் .ஆரம்ப சூழ்நிலையில் அவர் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளாராம்.
அப்போது எல்லாம் அவருடைய அப்பா தான் அவருக்கு ஆறுதலாகவும் இருந்துள்ளார். அவருடைய அம்மா கூட இந்த நடிப்பு துறை வேண்டாம் என்றுதான் கூறி வந்தாராம். ஆனால் அவருடைய அப்பாவின் மரணத்திற்குப் பிறகு இவருடைய வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்வும் இவருக்கு பெரியதாக தோன்றவே இல்லையாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஒரு சில உணர்ச்சிகரமான செயல்கள் இவர் மனதை பாதிக்க வைத்து சில நேரங்களில் ராஜுவை அழ வைத்து விட்டது என்று இவரே வியப்போடு கூறியிருக்கிறார்.
தனக்கும் அழுகை வரும் என்பதையே மறந்து விட்ட இவருக்கு இமான் அண்ணாச்சியின் வெளியேற்றம் மற்றும் சிபி தனக்கு ராஜூ எல்லாம் சோறு ஊட்டுவதை நினைத்து ஃபீலிங் ஆக இருக்கிறது என்று கூறியது….என ஒரு சில செயல்கள் இவருடைய மனதை அதிகமாக பாதித்து விட்டதாம்.
அந்த நேரங்களில் தன்னையுமறியாமல் இவர் அழுதுள்ளார். அதை இப்போது நினைத்தாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தனக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருப்பதால் தன்னுடைய திறமையை காட்டி மேலும் சிறப்புகளையும் பெருமையும் பெறவேண்டும் என்றும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்கள் இனி வெற்றிகளாக மாறவேண்டும் என்பதுதான் அவருடைய தீவிரமான ரசிகர்களில் வாழ்த்துக்களும், ஆசீர்வாதமாக இருந்து வருகிறது.