கனடாவில் தமிழ் சிறுவன் ஒருவர் காணாமல்போனதாக கூறப்படும் நிலையில் பொலிசார் சிறுவனை தேடி வருகிறார்கள்.
கிழக்கு க்வில்லிம்பரி நகரத்தில் 15 வயதுடைய ஆதித்யா வசந்தன் எனும் குறித்த சிறுவர் காணாமல்போயுள்ளார். இந்நிலையில் , யோர்க் பிராந்திய காவல்துறையினர் தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.
ஆதித்யா வசந்தன், கடைசியாக, ஜனவரி 20, 2022, வியாழன் அன்று காலை 11 மணியளவில், மார்க்கம் நகரின் 16வது அவென்யூ மற்றும் மார்க்கம் வீதி பகுதியில் அமைந்துள்ள அவரது பாடசாலையில் காணப்பட்டார்.
அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை, போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் சிறுவன்ஆதித்யா வசந்தன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள்1-866-876-5423, ext.7541 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.