மனித உரிமை கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு வெளிவிவகார அமைச்சு பதிலளித்துள்ளது.
மிகைப்படுத்தப்பட்ட அடிப்படையில் மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் பற்றிய விபரங்கள் பிழையானவை எனவும் மிகைப்படுத்தப்பட்ட அடிப்படையிலும், எதிர்மறை பிம்பத்தை உருவாக்கும் வகையிலும் அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
உலக அளவில் பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான நெருக்கடிகள் நிலவும் தருணத்தில், மனித உரிமை கண்காணிப்பகம் பக்கச் சார்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறான அறிக்கைகள் உள்நாட்டில் குழப்பங்களை தோற்றுவிக்க வழியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களை விடுதலை செய்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தினை திருத்தி அமைப்பதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
யுத்த்த்தின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அரசாங்கம் பதிவு செய்துள்ளது என வெளிவிவகார அமைச்சு, மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு பதிலளித்துள்ளது.