இலங்கையில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் சமீபத்திய அறிக்கையின்படி மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“இந்த 78 மாதிரிகள் ஜனவரி முதலாது, இரண்டாவது மற்றும் 3வது வாரங்களில் இருந்து சமூகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.