13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்.நகரில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர்.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவைக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் குறித்த நடவடிக்கை இன்றைய தினம் (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோரது பிரசன்னத்தோடு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.