யாழ்.பண்ணை பகுதியில் யாழ்ப்பாண பொலிஸாரினால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூகப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழில் இன்று குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலில் பொலிஸாரினால் பண்ணை பகுதியில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிரமதானப்பணியினை தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சார்பாக பொலிஸார் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .