நீர் கட்டண நிலுவைப் பணத்தை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவிலிருந்து அறவீடு செய்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்றை நீர்வழங்கல் அமைச்சு அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த காலங்களில் அதிகாரபூர்வ இல்லங்களில் பயன்படுத்திய நீருக்கான கட்டணங்கள் செலுத்தப்படாது நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்கள் இவ்வாறு கட்டணம் செலுத்த தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கட்டண நிலுவை தொடர்பில் அதிகாரபூர்வமாகவும், தனிப்பட்ட ரீதியிலும் குறித்த நபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.