அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் முதல் முறையாக சாலையொன்றுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்படவுள்ளது.
அமெரிக்காவில் விர்ஜினியா மாநிலம் பேர்பேக்ஸ் கவுண்டியில் உள்ள சாலைக்கே இவ்வாறு பெயர் சூட்டப்படவுள்ளது.
ஆங்கிலத்தில் Valluvar Way என்றும் தமிழில் ‘வள்ளுவர் தெரு’ என்றும் இந்த சாலை அழைக்கப்படவுள்ளது.
இந்த அறிவிப்பை விர்ஜினியா சபை பிரதிநிதி டான் ஹெல்மர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.




















