பூனை மீசை மூலிகையானது பல நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. இவை ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்குகிறது.
இதன் பூக்கள், பூனை மீசை போன்றும் இலைகள் துளசி இலை போன்றும் இருப்பதால், இதைப் ‘பூனை மீசை துளசி’ என்னும் அழைக்கிறார்கள்.
பூனை மீசை மூலிகை இவ்வளவு நன்மைகளை அளிக்கிறதா?
பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின் செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரம்.
தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .
சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது.
கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய்,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது.
டீ தயாரிப்பது எப்படி?
இதனை தயாரிக்க 1.1/2 தம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5கிராம் ), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும், பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும்.
சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேவை என்றால் தேன், பனைவெல்லம் சேர்த்துகொள்ளலாம்.
சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும்.
தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.
ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள். மலேசியா, சீனா , இந்தோனேசிய ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படுகிறது.