சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சவூதி வெளிவிவகார அமைச்சர் சேக் பாசில் பின் பர்ஹான் அல் சாவுட் இன்று அதிகாலை 1.20 மணிக்கு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
18 பிரதிநிதிகளுடன் விசேட விமானமொன்றில் சவூதி வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
நீதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட சிலர் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரை வரவேற்றுள்ளனர்.