அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தனியார் வங்கிகளின் இன்றைய தினம் 265 ரூபாவுக்கு அமெரிக்க டொலர் ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்னர் 260 ரூபா என்ற நிலையில் இருந்து ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதற்கமைய இன்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 265 ரூபாவும், கொள்வனவு விலை 255 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 347 ரூபாவும் கொள்வனவு விலை 332 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 291 ரூபாவும் கொள்வனவு விலை 277.5 ரூபாவாகும்.
சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 285.5 ரூபாவும் கொள்வனவு விலை 271 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 209 ரூபாவும் கொள்வனவு விலை 198.6 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அத்துடன் சர்வதேச நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சி அடைந்த முதல் சந்தர்ப்பமும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.