ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, ஜனாதிபதியால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது பல அத்தியவாசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதுடன், பொருட்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர்.
அத்தோடு, அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களும், எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும் கட்சியின் சில உறுப்பினர்களும் கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடும் நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி ஆற்றவுள்ள இந்த விசேட உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.