தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்திருந்த நிலையில்,மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.
இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுகர்வோரின் வருகையில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் வியாபாரிகள் வருதை தராமை மரக்கறிகளின் விலை வீழ்ச்சி மற்றும் விற்பனையின்மைக்கு முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் ஒவ்வொரு மரக்கறியினதும் மொத்த விலை கிலோகிராமுக்கு ரூ.200ஐ தாண்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.