இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதென இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனி, பருப்பு, அரிசி ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1,500 இற்கும் அதிகமான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள், துறைமுகத்தில் தேங்கியுள்ளன. அவற்றில் 75 சதவீதமானவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.