கணவரை பாகம் பிரித்து மனைவிகள் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பீகார் மாநிலம் பூர்ணிமா மாவட்டம் பவானிப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின்படி சமீபத்தில் ஒரு நபருடன் திருமணமாகியுள்ளது.
2வது மனைவியின் அதிர்ச்சி புகார்
திருமணமான சில நாட்கள் கழித்து தான் அவருக்கு தன் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி 6 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அவர் முதல் மனைவியுடன் சென்று வாழ்ந்துவந்துள்ளார்.
இதனால் இரண்டாவது மனைவி கணவனை தன்னுடன் வந்து வாழ வைக்க வேண்டும் என போலீசில் மனு அளித்தார். இதனைத்தொடர்ந்து, போலீசார் கணவன் மற்றும் இரண்டு மனைவிகளையும் அழைத்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் அதிரடி தீர்ப்பு
அப்போது இரண்டு மனைவிகளும் கணவர் தன்னுடன் தான் வாழ வேண்டும் என கூறினர். இதையடுத்து போலீசார் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தனர்.
கணவர் மாதத்தின் முதல் 15 நாட்கள் முதல் மனைவியுடனும் அடுத்த 15 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் வாழ வேண்டும் எனக்கூறி அதிர்ச்சியளித்துள்ளனர்.
மீண்டும் பாம்பு பிடிக்க களமிறங்கிய வாவா சுரேஷ் – முரண்டு பிடித்த ராஜநாகம்
மேலும், இரு வீட்டிற்கும் கணவர் தான் சம்பாதிக்கும் பணத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறினர். இதற்கு இரு மனைவிகளும் சம்மதித்த நிலையில் தற்போது இவர் மாதத்தில் பாதிநாள் முதல் மனைவி வீட்டிலும் பாதிநாள் இரண்டாவது மனைவி வீட்டிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்காக போலீஸ் ஸ்டேஷனிலே ஒரு ஒப்பந்தம் எழுத 3 பேரும் கையெழுத்து போட்டுள்ளனர். வருங்காலத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சட்ட ரீதியாக இதை எதிர்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவுமாம்