நடிகை அனுஷ்கா இருந்ததை விடவும் பல மடங்கு குண்டாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அருந்ததி, பாகுபலி போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் அனுஷ்கா நீங்கா இடம் பிடித்தார்.
அம்மணிக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க ஒரு பக்கம் உடல் எடையும் அதிகரித்தது.
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார்.
அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
ஆயுர்வேத சிகிச்சை
இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம்.
எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மீண்டும் சென்ற வண்ணம் இருந்தன.
ஆனால், தற்போது அம்மணிக்கு மீண்டும் உடல் எடை கூடியுள்ளது.
சமீபத்தில் அனுஷ்காவின் சில லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.