இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நம்முடைய குலதெய்வ தரிசனம் நம்முடைய கனவில் கிடைக்கும். அல்லது குலதெய்வம் பற்றிய விவரம் யார் மூலமாகவோ அறிய வரும்.
நம்முடைய குலத்தைக் காப்பது குலதெய்வ வழிபாடு. மாறிவிட்ட வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை காரணமாக குல தெய்வத்தை பலரும் மறந்துவிட்டனர். பல தலைமுறைக்கு முன்பு சொந்த ஊரைவிட்டு வெளியேறி வேறு ஒரு ஊரில் குடியேறியதால் குலதெய்வத்தை தொலைத்தவர்கள் பலர். தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாமல், குல தெய்வம் எது என்று அறிய பலரும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர்.
எவ்வளவு பாடுபட்டும் குல தெய்வம் பற்றிய விவரம் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுகின்றீர்களா… கவலைப்படாதீங்க. உங்கள் குல தெய்வத்தை கண்டறிய உதவும் ஸ்லோகம் ஒன்று உள்ளது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நம்முடைய குலதெய்வ தரிசனம் நம்முடைய கனவில் கிடைக்கும். அல்லது குலதெய்வம் பற்றிய விவரம் யார் மூலமாகவோ அறிய வரும்.
ஸ்லோகம்:
ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே இஷ்ட தர்ஷய நமஹா||
இதை தினமும் தூங்கச் சொல்வதற்கு முன்பு சொல்ல வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு சொம்பில் தண்ணீர் பிடித்து வைத்து, கிழக்கு பார்த்தபடி அமர்ந்து ஊதுபற்றி ஏற்றி நம்முடைய தேவையை மனதில் நினைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மந்திரத்தைச் சொல்லி முடித்ததும் சொம்பில் உள்ள தண்ணீரைக் குடிக்க வேண்டும். இந்த ஸ்லோகத்தை சனிக்கிழமை காலை அல்லது மாலையில் சொல்ல ஆரம்பிக்கலாம். தினமும் விடாமல் சொல்லி வர வேண்டும். 45 முதல் 90 நாட்களுக்குள் குல தெய்வம் பற்றிய விவரம் தெரிய வரும் என்பது நம்பிக்கை.
நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பதால் குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்