களனி – கொள்ளுவத்தை – பிலப்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு குறித்த நபர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டினுள் நுழைந்த நபரொருவருர் இந்தக் கொலையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துதுடன், அங்கிருந்த உடைமைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த வர்த்தகர் 69 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.